திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (45). இவரது வீட்டில் பட்டாசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட
எஸ்.பி.அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படையினர் ராஜாவின் வீட்டில் நேற்று இரவு அதிரடியாக சோதனையிட்டனர். சோதனையில் உரிய அனுமதி இன்றி சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைஅடுத்து அந்த பட்டாசை பறிமுதல் செய்த தனிப்படையினர், துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர். புகாரின் பேரில், துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் நகரத்தில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அதிகளவு பட்டாசு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.