Rock Fort Times
Online News

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: சுற்றுச்சூழல்துறை அறிவிப்பு…

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பட்டாசுகள் வெடிக்க கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுசூழல் மாசு ஏற்படுவதால் அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப் படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று, காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்