திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியில் உள்ள இருசக்கர பேட்டரி வாகனங்கள் விற்பனை கடை மற்றும் குடோனில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையிலிருந்து கரும்புகை வெளியேறி தீ கொழுந்து விட்டு எரிந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சுற்றுவட்டார மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தகவல் அறிந்த தீயணைப்பு துறை, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத் தலைமையில் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த 27 வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். கரும்புகை அதிகளவில் பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் இருசக்கர வாகன பேட்டரிகள் வெடித்து சிதறியதால் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் பேட்டரி உதிரி பாகங்கள் உட்பட சுமார் ரூ.97 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

Comments are closed.