Rock Fort Times
Online News

திருச்சி பேக்கரியில் தீ விபத்து

திருச்சி பாரதியார் சாலையில் ஆர்.சி. பள்ளி அருகாமையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரி முன்பு வாடிக்கையாளர்கள் அமர வசதியாக கீற்று கொட்டகை அமைக்கப்பட்டது. இந்த கீற்று கொட்டகையில் இன்று காலை 6 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த கடை பெரிய வணிகவளாகத்தில் அமைந்துள்ளது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்த காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கீற்று கொட்டகை தவிர வேறு எங்கும் தீ பரவவில்லை. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. முதல் தளத்தில் நின்ற நபர்கள் யாரேனும் சிகரெட் குடித்துவிட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தீ விபத்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்