Rock Fort Times
Online News

மராட்டியத்தில் பயணிகள் ரெயிலில் தீ விபத்து!

மராட்டிய மாநிலத்தில் புதிய ஆஷ்தி  பகுதியிலிருந்து அகமத்நகர் செல்லும் சிறப்பு ரெயிலில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புறநகர் ரயில் சென்று கொண்டிருக்கும்போதே ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து 4 பெட்டிகளுக்கும் பரவியது.  5 பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்