தமிழ்நாட்டில் பிப்.23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23ம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த நவம்பர் 4ம் தேதி எஸ்ஐஆர் பணிகள் தமிழகத்தில் தொடங்கியது. எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்காகவும், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்காகவும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்மூலம் இதுவரை நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் இதுவரை 34.75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததுள்ளது. மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பிப்ரவரி 23-ம் தேதி இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

Comments are closed.