திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இறுதி கட்டப் பணிகள்… * மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு!
திருச்சி மாநகர பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. ஆகவே, இந்த பேருந்து நிலையம் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் ஏப்ரல் தொடக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பஞ்சப்பூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று(16-03-2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகர பொறியாளர் . பி.சிவபாதம், செயற்பொறியாளர் . கே.எஸ். பாலசுப்பிரமணியன்,உதவி ஆணையர் ச.நா.சண்முகம், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.