கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம், நரசிபுரம் பிரிவு பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது கிணத்துக்குளி ஓடை தடுப்பணைக்குள் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இந்நிலையில் கோவை வனக் கோட்டம் உதவி வனப் பாதுகாவலர் செந்தில்குமார், போளுவாம்பட்டி வனச் சரக அலுவலர் சுசீந்திரநாத் மற்றும் வனப் பணியாளர்கள், “CWCT” தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் கோவை வன மண்டலம் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் சுகுமார், நரசிபுரம் உதவி கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோரால் இறந்த பெண் யானைக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. இறந்த பெண் யானையின் வயது 22 முதல் 25 வரை இருக்கலாம் எனவும் , யானை இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். யானையின் கர்ப்பப்பையில் 20 முதல் 22 மாதமுடைய ஆண் சிசு இருந்தது. யானையின் சினைப்பை பிரச்சினை காரணமாக பெண் யானை இறந்து இருக்கலாம் என மருத்துவ அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.