சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அன்விதா (24) என்பவர் எம்பிபிஎஸ் படித்து முடித்தார். பிரபல கண் மருத்துவரின் மகளான இவர் தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் உடல் எடையை குறைப்பதற்காக கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் அதற்கான பயிற்சி மேற்கொண்டு வந்தார். வழக்கம் போல கடந்த புதன்கிழமை உடற்பயிற்சி மேற்கொண்ட சில நிமிடங்களிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உடற்பயிற்சி மைய ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்விதா மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 24 வயது பெண் டாக்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.