பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை – மகன் கைது-மகளிர் போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது ‘குட்டு’ அம்பலம்…!
கரூர் மாவட்டம், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகளில் போக்ஸோ சட்டம் குறித்து மாணவ- மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தோகைமலை அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது பள்ளியில் பயிலும் பிளஸ் -1 மாணவி ஒருவர் எழுந்து தன்னையும், தனது தங்கையையும் தனது சித்தப்பா செல்வம் மற்றும் அவரது மகனான எங்கள் பள்ளியில் பயிலும் பிளஸ்-1 மாணவர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், இதற்கு எங்களது தாய் ஜோதி உடந்தையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மகளிர் காவல் நிலைய போலீஸார், உடனே இது தொடர்பாக கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர் கனகவல்லிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கனகவல்லி அளித்த புகாரின்பேரில் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் செல்வம் மற்றும் அவரது மகன் பிளஸ்- 1 மாணவர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மாணவிகளின் தாய் ஜோதி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மூன்று பேரையும் கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். அவர்களில் மாணவர் திருச்சி சிறுவர் நல சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
Comments are closed.