Rock Fort Times
Online News

திருச்சியில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகளால் பரபரப்பு…

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும். கரும்புக்கு உரிய விலை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவணம் கட்டிக்கொண்டு மண்டை ஓடுகளுடன் அரை நிர்வாணத்துடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி தலைமை தபால் அலுவலகம் அருகே சிக்னலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில விவசாயிகள் திடீரென எழுந்து அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் விவசாயிகள் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கினர்.
இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல, திருச்சியில் என்.எச். 67 தேசிய அரை வட்ட சுற்றுச்சாலைக்காக காவிரி பாசன 13 ஏரிகள் அழி க்கப்படுவதை கண்டித்தும், ஏரிகளில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்காமல் உயர்மட்ட பாலங்கள் அமைக்க வேண்டும்.

கார்ப்பரேட்டுக்கு துணை போகும் மத்திய மாநில அரசுகளையும், வருவாய்த்துறை, நீர்வளத்துறை பொறுப்பற்ற செயலை கண்டித்தும் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மற்றொரு தரப்பு விவசாயிகள் தண்ணீர் கூட அருந்தாமல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்