திருச்சி, மாம்பழச்சாலை அருகே காவிரி மணலுக்குள் புதைந்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று (செப்.24) நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கல்வி கடன், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி ஆற்றின் உபரிநீரை ஐயாற்றில் திருப்பி விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Comments are closed.