Rock Fort Times
Online News

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்…!

புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரான ஏ.வி.எம் சரவணன் சென்னையில் இன்று (டிச.4) காலமானார். இந்திய சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பாளரான ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. ஏவிஎம் நிறுவனத்தின் கீழ் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் சிகரம் விருது போன்ற உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார். இவரது உடல் இறுதி மரியாதைக்காக ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்