தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா. இவரது இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.அதனை தொடர்ந்து மனோஜ் “சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தை மனோஜ் இயக்கியுள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மனோஜ் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48.அவரது மரணம் திரை உலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Comments are closed.