சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைப் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளார் அல்லி, வருகிற மே 1 ம் தேதி முதல் மே 15 ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளார். ஆனால், குடும்ப நல நீதிமன்ற அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.