திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு மலிண்டோ விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை இமிகிரேசன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலூரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 46) என்பவரை சோதனை செய்த போது அவர் பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மற்றும் தந்தை பெயரை மாற்றி போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிய வந்தது. அதேபோல மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்த போது பெரம்பலூரை சேர்ந்த மதுரை வீரன் ( 48), ராமநாதபுரத்தை சேர்ந்த சீனி பாஷா ( 63) ஆகிய இருவரும் போலி பாஸ்போர்ட்டில் வந்தது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரும் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 3 பேர் மீதும் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.