கடந்த 2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தமிழகத்தின் பரவலான தொற்று ஏற்படுத்திய கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தற்போது கொரோனா தீவிரமாக பருவ தொடங்கியுள்ளதால், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கியுள்ளது எனவும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை. அதன் உட்பிரிவான ஒமிக்ரான் நோய் தொற்றே உள்ளது. அதுவும் கட்டுப்படுத்தும் அளவே. எனவே பொதுவெளிகளில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவை தற்போதைய சூழலில் அவசியமற்றது என தெரிவித்துள்ளார்.
Comments are closed.