Rock Fort Times
Online News

ரயில்வே ஊழியாிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு : ரவுடி கைது…

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41). இவர் பொன்மலை ரெயில்வே டீசல் பிரிவில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று ( 01.11.2023 ) பணி முடிந்து மதியம் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்பொழுது இவர் செந்தண்ணீர்புரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபா் ஒருவா் கார்த்திக்கிடம் பணம் கேட்டுள்ளார். கார்த்திக் பணம் தர மறுக்கவே உடனடியாக அந்த மர்ம நபா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர்   வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கார்த்திக் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் செந்தண்ணீர்புரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மர்ம நபா் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவா் காா்த்திக்கிடம் கத்தி முனையில் பணத்தை பறித்து சென்ற சங்கிலியாண்டபுரம் பாரதியார் நகர் ரமேஷ் என்பவரது மகன் தினேஷ்குமார் என்கிற குண்டுமணி (வயது 28) என்பது தொியவந்தது. தினேஷ்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து பணத்தையும் கத்தியையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்