தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம், ஆதாரங்களுடன்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகார் அனுப்பி உள்ளது. இதையடுத்து, தமிழக அரசியல் களத்தில் மட்டும் அல்லாது, எதிர்க்கட்சிகள் முகாமிலும் திடீர் பரபரப்பு பற்றிக் கொண்டது. அமைச்சர் அபகரித்த நிலம் பற்றிய முழு விவரங்களையும் அறப்போர் இயக்கம் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் வெளியிட்டு உள்ளது. அமைச்சர் தமது மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை (சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் இந்த நிலம் உள்ளது) அதிகாரத்தை பயன்படுத்தி அபகரித்துள்ளார். அந்த நிலத்தை தமது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று கூறி முழு ஆதாரங்கள், ஆவணங்களை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகாராக அனுப்பி இருக்கிறது. அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராமன் இந்த புகாரை அளித்துள்ளார்.

Comments are closed.