இம்மானுவேல் சேகரன் திருவுருவப் படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை…!
இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன் , முன்னாள் அண்ணா தொழிற்சங்க முன்னோடி சந்திரமோகன், துவாக்குடி நகர கழக துணை செயலாளர் கணபதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரசன்னகுமார், புள்ளம்பாடி பேரூர் கழக நிர்வாகி ரவிச்சந்திரன், திருவெறும்பூர் ஒன்றிய நிர்வாகி நந்தினி, அரியமங்கலம் அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Comments are closed.