திருச்சி காஜாமலையில் பரபரப்பு ! பிரபல தனியார் ஓட்டலை வருவாய்த்துறை கையகப்படுத்த முயற்சி – தள்ளுமுள்ளு போலீஸ் குவிப்பு ! (படங்கள் )
திருச்சி, காஜாமலை பகுதியில் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான இந்த ஓட்டல், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.75 லட்சம் என்ற அடிப்படையில் குத்தகைக்கு விடடப்பட்டது. இந்நிலையில், குத்தகைக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து,மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ,சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் அந்த ஓட்டலை கையகப்படுத்த இன்று காலை அங்கு சென்றனர். ஆனால் நிர்வாக தரப்பினரோ, எவ்வித குத்தகையும் பாக்கி இல்லாமல் ஹோட்டலை நடத்தி வருகிறோம். பல கோடி செலவில் கட்டிடங்களை எழுப்பி உள்ளோம் . எனவே உடனடியாக காலி செய்ய முடியாது. கால நீட்டிப்பு வேண்டும் என கூறினர். இதனை அதிகாரிகள் ஒப்புக்கொள்ள மறுத்தனர். அதைத் தொடர்ந்து, நிர்வாக தரப்புக்கும் போலீசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் சார்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் ஹோட்டல் முன்பு திரண்டனர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். சிலர் போலீஸ் தடையை மீறி, சுவர் ஏறி குதித்து ஓட்டல் வளாகத்துக்குள் வந்தனர். தற்போது நிர்வாக தரப்புக்கும் வருவாய்த் துறையினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.