கடந்த அதிமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் திருச்சியைச் சேர்ந்த வெல்லமண்டி என். நடராஜன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக, ஓபிஎஸ் தலைமையிலும், ஈபிஎஸ் தலைமையிலும் இரண்டாக பிளவுப்பட்டது. இதில் வெல்லமண்டி நடராஜன் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையை ஏற்றார். அதனடிப்படையில் ஓ.பி.எஸ். தலைமையில் இயங்கும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் அமைப்பு செயலாளராகவும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜாதேவி நேற்று ( பிப்.27 ) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இச்செய்தி அறிந்த ஓ.பன்னீர்செல்வம் திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள வெல்லமண்டி நடராஜனின் வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Comments are closed.