சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த, பாக்கெட் ஷாம்பு மற்றும் செயற்கை குங்குமம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனைக் கருத்தில் கொண்டு, சபரிமலை, பம்பா, எருமேலி பகுதிகளில் பாக்கெட் ஷாம்பு, ரசாயன குங்குமம் விற்பனைக்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் செயற்கை குங்குமத்தின் காரணமாக நீர் மாசு அதிகரித்துள்ளதாக கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், “எருமேலியில் உள்ள ஆற்று ஓடைகளின் குறுக்கே வலைகள் அமைக்கப்பட வேண்டும். வேதியியல் ரீதியாக தயாரிக்கப்படும் குங்குமம் சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது,” எனவும் கேரள ஐகோர்ட்டு குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.