Rock Fort Times
Online News

இண்டர்நேஷனல் ரோட்டரி சங்கத்தின் துணைத்தலைவராக என்ஜினியர் எம்.முருகானந்தம் நியமனம்..!

அன்னை தமிழ்நாட்டிற்கும், அகில பாரத இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக, மலைக்கோட்டை மாவட்டமான திருச்சியை சேர்ந்த MMM என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும், என்ஜினியர் எம்.முருகானந்தம், சர்வதேச ரோட்டரி சங்கத்தின் (2026-27) ஆண்டிற்கான இண்டர்நேஷனல் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச ரோட்டரி சங்கத் தலைவரான யின்கா பாபலோலா மற்றும் வாரிய உறுப்பினர்கள் சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். உலக அரங்கில் 161க்கும் அதிகமான நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரோட்டரி சங்கத்திற்கு தமிழ்நாடு, திருச்சியை சேர்ந்த ஒருவர் இண்டர்நேஷனல் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்