Rock Fort Times
Online News

திருச்சி,என்எஸ்பி ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்…!(வீடியோ இணைப்பு)

திருச்சி மாநகரின் முக்கிய வணிகப் பகுதியான என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம், சூப்பர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், நகைக்கடைகள், ஓட்டல்கள் என அனைத்து கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தரைக் கடைகளும், தள்ளுவண்டி கடைகளும் அதிக அளவில் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளுக்கு திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் வரும்போது தரைக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. ஆகவே, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் தள்ளுவண்டி கடைகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டன ஆனால், அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள முன்வரவில்லை.

இந்தநிலையில் இன்று(05-03-2025) பொக்லைன்இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அங்கிருந்த தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் போன்றவற்றை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அகற்றினர். சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை வாசல், தெப்பக்குளம், காமராஜர் வளைவு உள்ளிட்ட பகுதி வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

               ADVERTISEMENT…👇

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்