திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவ லகத்தின் மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ் காந்தி என்பவர் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மின் கம்பத்தில் ஏறி பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மின்இணைப்பை துண்டிக்காமல் உரிய பாதுகாப்பு இல்லாமல் 110 கே.வி.மின் கம்பத்தில் ஏறி பணி செய்யுமாறு உயர் அதிகாரி வாய் மொழியாக உத்தர விட்டதாகவும், அதன் பேரில் அவர் மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்ததாகவும், இதற்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உதவி மின் பொறியாளர் ஆர். சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.