Rock Fort Times
Online News

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானோருக்கு நவ.25 முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்: தமிழக அரசு தகவல்…

கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த மாதமே 14 மற்றும் 15 தேதிகளில் பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். தங்கள் பெயரை சேர்க்க கோரி அக்.25 வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
மேல்முறையீடு செய்துள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டத்திலுள்ள பயனாளிகளுக்கு தீபாவளிக்கு முன்னதாக ரூ.1,000 செலுத்தப்பட வாய்ப்பு உள்ளது. கடைசி நாளான அக்டோபர் 25 வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானோருக்கு நவ.25 முதல்  குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்