மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு தோலம்பாளையம்
பகுதிகளில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து அந்தப் பகுதியில் உள்ள ஆதிமாதையனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வனவிலங்குகள் வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தன அதிலும் குறிப்பாக யானை ஒன்று பயிர்களை அடிக்கடி நாசம் செய்து வந்தது. இதனை கண்டித்து கிராம மக்கள் காரமடை தோல ர் பாளையம் சாலை தாயனூரில்திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .அதனை தொடர்ந்து வனவிலங்குகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறை வனத்துறையினர் அதிகம் முயற்சி எடுத்து வந்தனர் .இந்த நிலையில் வனத்துறையினர் ஒரு யானையை மயக்க ஊசி கொடுத்து பிடித்தனர் .அந்த யானைக்கு கோழிக்க முத்தியானை பராபரிப்பு முகாமில் இருந்து சின்னத்தம்பி திரைப்படப்புகழ் கும்கி யானை வரவழைக்கப்பட்டு வாயில் காயம்பட்ட அந்த பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை மேல் சிகிச்சைக்காக வரகலியாறு யானை பராமரிப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமார் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சையின் போது டாக்டர் யானையின் பின்பக்கத்தில் ஊசி போட ஆயத்தமானார் ஊசி போட அருகில் நெருங்கிய போது யானை பின்னங் காலால் டாக்டரை எட்டி உதைத்தது இந்த திடீர் கலவரத்தில் டாக்டர் மயிரி லையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
