திருச்சி, பழைய ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அறையில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த அறையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு சரி பார்க்கப்படும். அந்தவகையில் இன்று(13-03-2025) மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மா.பிரதீப்குமார், அரசியல் கட்சி பிறமுகர்கள் முன்னிலையில் திறந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்த்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் த.அருள், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன் ராஜசேகர், தேர்தல் தனி வட்டாட்சியர் செல்வகணேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் திமுக சார்பில் வழக்கறிஞர் அந்தோணி, அதிமுக சார்பில் பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, அன்பழகன், நாகநாதர் பாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா பட்டேல், தே.மு.தி.க சார்பில் திருப்பதி, ஆம்ஆத்மி சார்பில் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் இளங்கோவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed.