Rock Fort Times
Online News

இ- டெண்டர் முறையை ரத்து செய்ய கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா…

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ( 20.10.2023 ) மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு.மாநில துணை தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடராஜன், செல்வராசு, பன்னீர்செல்வம், இருதயராஜ், பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மின்வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் ஊழியர்கள் நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும். இ-டெண்டரை ரத்து செய்து மின்வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்