திருச்சி மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் ஏப்ரல் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என்று மேற்பார்வை பொறியாளர் ஏ.செல்வி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- துறையூர் கோட்டத்தில் 01.04.2025 முதல் செவ்வாய்க்கிழமையும், முசிறி கோட்டத்தில் 04-04-2025( முதல் வெள்ளிக்கிழமை ), லால்குடி கோட்டத்தில் 08.04.2025(இரண்டாம் செவ்வாய்க்கிழமை) ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 11.04.2025 (இரண்டாம் வெள்ளிக்கிழமை ) திருச்சி நகரிய கோட்டத்தில் 15. 04.2025 (மூன்றாம் செவ்வாய்க்கிழமை ), மணப்பாறை கோட்டத்தில் 22.04.2025( நான்காம் செவ்வாய்க்கிழமை ஆகிய தேதிகளில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கின்றன. எனவே, மேற்குறிப்பிட்ட வார நாட்களில் நடக்க உள்ள கூட்டத்தில் மின் நுகர்வோர் பங்கேற்று தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.