Rock Fort Times
Online News

இலவச மின்இணைப்பு வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது…!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில்  உதவி மின்பொறியாளராக பார்த்திபன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரை டி.இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் அணுகி தனது விவசாய நிலத்திற்கு அரசால் வழங்கப்படும் இலவச மின் இணைப்பு வழங்கிட கேட்டுள்ளார். அதற்கு உதவி மின் பொறியாளர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு இறுதியாக ரூ.5000 கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி, இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விவசாயிக்கு சில ஆலோசனைகள் கூறினர். அவர்களது ஆலோசனையின் பேரில் இன்று (04.03.2026) மின்வாரிய அதிகாரியிடம் லஞ்சப் பணத்தை மாரியப்பன் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர்ராணி, பாலமுருகன் ஆகியோர் பாய்ந்துசென்று பார்த்திபனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்