Rock Fort Times
Online News

கால்நடை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது…!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் முத்தையா தனது வீட்டுமனையில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு பெறப்பட்ட தற்காலிக மின் இணைப்பை நிரந்தர வீட்டு மின் இணைப்பாக மாற்ற தாத்தையங்கார் பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வணிக ஆய்வாளர் சரவணன்( வயது 56), முத்தையாவிடம் ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்தையா, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் இன்று (29.09.2025) முத்தையா, லஞ்சப்பணத்தை சரவணனனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் ஆகியோர் பாய்ந்து சென்று சரவணனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்