Rock Fort Times
Online News

எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் நாளை(ஆக23) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம்…! * பிரசார வாகனத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எழுச்சி பயணத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து எழுச்சி உரையாற்றி வருகிறார். அந்தவகையில் திருச்சியில் நாளை (ஆகஸ்ட் 23) முதல் 25-ம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் ப.குமார்( தெற்கு), மு.பரஞ்ஜோதி( வடக்கு) ,ஜெ.சீனிவாசன்( மாநகர்) மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. கட்சிக் கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. ராட்சத பலூன்களும் பறக்க விடப்பட்டுள்ளன. அதேபோல
திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தில்லை நகரில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ‌.சீனிவாசன் தலைமையில், அதிமுக செயல்வீரர் திருச்சி ஜி.நாகு மற்றும் எனர்ஜி.அப்துல் ரகுமான் ஆகியோரது ஏற்பாட்டில் பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, கழக அமைப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில துணைச் செயலாளர் புல்லட்ஜான், மாவட்ட கழக அவைத் தலைவர் டி.ராமு, கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் ஜோதிவாணன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர்கள் பூபதி, அன்பழகன், நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, வாசுதேவன், ரோஜர், கலிலுல் ரகுமான் நிர்வாகிகள் இஞ்சினியர் ரமேஷ், சொக்கலிங்கம், ஏர்போர்ட் பொன்னர், சுரேந்தர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த வாகனம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் திருச்சிக்கு நாளை வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நாளை (ஆக. 23) திருச்சி, திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணியளவிலும், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட் வெல்லமண்டி பகுதியில் மாலை 5.30 மணியளவிலும், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட லால்குடியில் இரவு 7 மணியளவிலும் சிறப்புரையாற்றுகிறார். நாளை மறுநாள் (ஆக.24) அன்று மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மாலை 4 மணியளவிலும், துறையூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட துறையூர் பேருந்து நிலையம் அருகில் மாலை 5.30 மணியளவிலும், முசிறி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட துறையூர் ரோடு, முசிறி கைகாட்டி அருகில் இரவு 7 மணியளவிலும், ஆக.25-ந்தேதி அன்று மணப்பாறையில் மாலை 4 மணியளவிலும், திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட புத்தூர் நான்கு ரோட்டில் மாலை 5.30 மணியளவிலும், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் முன்பு இரவு 7 மணியளவிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்