Rock Fort Times
Online News

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜன.7) மாலை டெல்லி பயணம்…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று( ஜன. 7) திடீர் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக–பாஜக கூட்டணியில் இன்று அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி உடனடியாக டெல்லி செல்ல இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே எஸ்.பி. வேலுமணி டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி வந்த அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. எஸ்.பி.வேலுமணி, அமித்ஷாவை சந்தித்து இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்