திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள கொப்பம்பட்டி அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் நோபில். இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இவர், மது பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று(04-03-2024) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கேஸ் சிலிண்டரை திறந்து தீயை பற்ற வைத்துள்ளார். இதில் அவரது உடலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. மேலும், கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்களான கார்த்திக், வினோத், ராம்ராஜ் ஆகியோர் ஓடி வந்து நோபிலை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்கள் மீதும் தீ பற்றியது. இதுகுறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில் விசாரணை நடத்தி
வருகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.