
திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இயங்கும் ஆர்.வி.பி மன்றத்தில் சி.பி.ஐ. நகர குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரக் குழு உறுப்பினர் துரைசாமி தலைமை வகித்தார். நடைபெற்ற வேலைகள் குறித்து நகர செயலாளர் ஜனசக்தி உசேனும், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ் குமாரும், அரசியல் நிலை குறித்து மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமியும் உரை நிகழ்த்தினார்கள். மணப்பாறை நகரில் உள்ள அரசு குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்துள்ளதால் அரசு அலுவலர்கள் யாரும் தங்க முடியாத நிலை உள்ளது. ஆகவே, பழுதடைந்த அடுக்குமாடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மணப்பாறை குளத்தின் கலிங்கு நீர் வெளியேறும் ஆத்துவாரி பகுதியை முழுமையாக அளந்து தூர்வார வேண்டும். மணப்பாறை நகரில் இருந்து திருச்சிக்கு காலை நேரத்தில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கமணி மனோன்மணி சவுக்கத் அலி சுப்ரமணியன் நல்லுச்சாமி ரஹ்மத்துனிஷா கவிதா செல்வம் ஜெயலட்சுமி மரியராஜ் தங்கராஜ் லாரன்ஸ் மைக்கேல் கண்ணன் ராஜா சரவணன் உட்பட நகர குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.