Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்…!

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும் திருச்சி -காரைக்கால் டெமு ரெயில் (76820) வருகிற 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டும் இயங்கும். ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் ஈரோடு – திருச்சி பயணிகள் ரெயில் (56106) வருகிற 5, 9- ந்தேதிகளில் ஈரோட்டில் இருந்து திருச்சி கோட்டை ரெயில் நிலையம் வரை மட்டும் இயங்கும். காரைக்குடியில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் காரைக்குடி – திருச்சி பயணிகள் ரெயில் (56832) 5-ந்தேதி மற்றும் 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் காரைக்குடியில் இருந்து குமாரமங்கலம் வரை மட்டும் இயங்கும். காரைக்கால் – திருச்சி டெமு ரெயில் (76819) வருகிற 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16843) வருகிற 5-ந்தேதி மற்றும் 19-ந்தேதி திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.12 மணிக்கு புறப்பட்டு பாலக்காட்டுக்கு செல்லும். திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் திருச்சி – ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16849) வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டும் இயங்கும்.மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (16850) 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை ராமேசுவரம் – மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு செல்லும். மயிலாடுதுறையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக செல்லும் மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10, 13 -ந் தேதிகளில் மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லிக்குடி வழியாக இயங்காமல் மாற்றுப்பாதையில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு செல்லும். மேற்கண்ட தகவல் ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்