பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி, அம்பேத்கர் நகரில் உள்ள நவீன தகன மேடை 10 நாட்கள் இயங்காது…! * திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மாநகராட்சி, மண்டலம் எண்.01, வார்டு எண்.4க்குட்பட்ட அம்பேத்கர் நகரில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் நவீன தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகன மேடையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக 24.04.2025 முதல் 03.05.2025 வரை 10 நாட்களுக்கு இந்த நவீன எரிவாயு தகன மையம் செயல்படாது. ஓயாமரி மற்றும் கோணக்கரை பகுதிகளில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை தொடர்ந்து செயல்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.