திருச்சி பாலக்கரை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 33). இவர் வாழவந்தான் கோட்டையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார் . திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த ராஜா என்கிற எட்வர்டு ஆரோக்கியராஜ் ஆக்டிங் டிரைவராக இருந்து வந்தார். சம்பவத்தன்று திருச்சி மேலப்புதூர் பகுதியில் காருக்குள் ராஜா பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், பாலக்கரை போலீசார் ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.