Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதிகளில் நவ.2-ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் நாளை (01.11.2025) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தரராஜ நகர், ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை, ரெங்கா நகர், சுப்ரமணிய நகர், வி.என் நகர், தென்றல் நகர், கவி பாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டி, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர், ஈ.பி.காலனி, அரியமங்கலம், மலையப்ப நகர், ரயில் நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், அம்பேத்கர் நகர், விவேகானந்த நகர், விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், ஆனந்த நகர், கே.கே நகர், அம்மா மண்டபம், பாலாஜி அவன்யூ, ஏ.ஐ.பி.இ.ஏ. நகர் , மேலூர், பெரியார் நகர், திருவானைக்காவல், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் 02.11.2005 ஒரு நாள் இருக்காது. 03.11.2025 அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்