Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதிகளில் ஏப்ரல் 10 ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள கம்பரசம் பேட்டையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தின் மூலம் திருவெறும்பூர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. தற்போது இதன் பிரதான உந்து குழாயை, அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்தின் மூலம் செல்லும் பிரதான உந்து குழாய் உடன் இணைக்க வேண்டியுள்ளது. மேலும், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் குடிநீர் உந்து குழாயை உயர்மட்ட நீர்தேக்க தொட்டி உந்து குழாயுடன் இணைக்கும் பணி 09.04.2025 அன்று மேற்கொள்ளப்பட
உள்ளது. இதன் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர் கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யகொண்டான் திருமலை, மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம்.நகர் மற்றும் தேவதானம், மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம், திருவெறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 10.04.2025 ஒருநாள் இருக்காது. 11.04.2025 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்