பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி- ராமேஸ்வரம் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், பொறியியல் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி- ராமேஸ்வரம் விரைவு ரயிலானது (16849) செப்டம்பர். 2, 3, 4, 5, 10, 11, 12, 14, 16, 17, 18, 19, 21, 23, 24, 25, 26, 28, 29, 30 ஆகிய தேதிகளில் மானாமதுரை வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக, ராமேசுவரம்- திருச்சி விரைவு ரயிலானது (16850) மேற்கண்ட நாட்களில் மானாமதுரையில் இருந்து தினமும் மாலை 4.35 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.