Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் அதிரடி மாற்றம்…!

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி-காரைக்கால் டெமு ரயிலானது (76820) வருகிற ஜூலை 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை காரைக்கால்- திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி- திருவாரூர் இடையே மட்டும் இயங்கும். மறுமார்க்கமாக, காரைக்கால்- திருச்சி டெமு ரயிலானது (76819) ஜூலை 2 முதல் 7-ம் தேதி வரை திருவாரூர்- காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது திருவாரூர் – திருச்சி இடையே மட்டும் இயங்கும். இதேபோல, காரைக்குடி-திருச்சி டெமு ரயிலானது (56832, வரும் ஜூலை 1, 8 ம் தேதிகளில் திருச்சி-குமாரமங்கலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது காரைக்குடி- குமாரமங்கலம் இடையே மட்டும் இயங்கும். திருச்சி-பாலக்காடு விரைவு ரயிலானது (16842) வரும் ஜூலை 1, 8 ஆம் தேதிகளில் திருச்சி-கோட்டை ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்