பாமகவில் நாளுக்கு நாள் தந்தை- மகன் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை, ராமதாஸ் நீக்கினார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, தான் தான் பாமகவின் தலைவர் எனவும், தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்றும் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு மேலும் அதிகரித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாமக செயல் தலைவர் பதவியை தனது மகள் காந்திமதிக்கு ராமதாஸ் வழங்கியுள்ளார். தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தனது மூத்த சகோதரியை பாமகவின் செயல் தலைவராக ராமதாஸ் அறிவித்திருப்பது அன்புமணிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Comments are closed.