மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் டாக்டர் முகம்மது முகைய்யதீன், செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ.விடம் விருப்ப மனு…!
தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புப வர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்திய தேசிய காங்கிரஸின் 141-வது நிறுவன நாளான டிசம்பர் 28-ம் தேதி, வருகிற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதியில் போட்டியிடுவதற்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில துணைத்தலைவர் டாக்டர் முகம்மது முகைய்யதீன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ.விடம் விருப்ப மனு அளித்தார். அப்போது தென் சென்னை மத்திய மாவட்ட தலைவர் மூத்த வழக்கறிஞர் எம்.ஏ. முத்தழகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.