மொஹரம் பண்டிகை ஜூலை 6ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் உறுதி செய்திருக்கிறது. ஜூலை மாதம் பிறந்தது முதலே, மொஹரம் பண்டிகை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால், மொஹரம் பண்டிகை ஜூலை 6ம் தேதி என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொஹரமை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான தகவலாகும். கடந்த 26-06-2025 அன்று மொஹரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. ஆகையால் 27-06-2025 தேதி அன்று மொஹரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே யொமே ஷஹாதத் ஞாயிற்றுக்கிழமை 06-07-2025 ஆகும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 07-07-2025 திங்கட்கிழமை அரசு விடுமுறை இல்லை. எனவே தவறான தகவலை பரப்பாதீர்கள் என்று அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.