Rock Fort Times
Online News

முனைவர் பட்ட மாணவர்களை மரியாதையாக நடத்த வேண்டும்- பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை…!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் திருச்சி மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இந்தநிலையில் கடந்த 29ம் தேதி இந்தப் பல்கலைக்கழகத்தின் 39- வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 430 ஆய்வு மாணவர்களுக்கு முனைவர் பட்டம், 90 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் என 520 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார். அப்போது பட்டம் வாங்கிய மனிதவள மேம்பாடு ஆராய்ச்சி மாணவர் ஒருவர் ஆளுநரிடம் நேரடியாக புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஆராய்ச்சி அறிஞர்கள் தங்களை உரிய மரியாதையுடன் நடத்தாமல் தங்களது தனிப்பட்ட வேலைகளைச் சொல்லி அவமானப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். விழா மேடையில் ஆளுநரிடம், முனைவர் மாணவர் புகார் மனு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், முனைவர் பட்டத்திற்காக மாணவர்களை அலைக்கழிக்கவோ, துன்புறுத்தவோ, அவமானப்படுத்தவோ கூடாது. பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். யாராவது அத்தகைய போக்கை கடைபிடித்தால் அல்லது இதுபோன்ற சம்பவம் நடந்தால் தவறிழைக்கும் வழிகாட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஒற்றுமையாக இல்லாவிட்டால் எதிர்கட்சியாகவே இருக்கவேண்டியதுதான் - முன்னாள் அமைச்சர் தங்கமணி காட்டம்..!

1 of 914

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்