Rock Fort Times
Online News

ரேஷன் சம்பந்தமாக குறைகளை தெரிவிக்க வேண்டுமா?- திருச்சி மாவட்டத்தில் 15ம் தேதி முகாம்கள்…!

திருச்சி மாவட்டத்தில் வருகிற 15-06-2024 (சனிக்கிழமை) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்
மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில், திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, வருகிற சனிக்கிழமை திருச்சி கிழக்கு வட்டத்தில் சிந்தாமணி புதுத்தெரு, திருச்சி மேற்கு வட்டத்தில் மிளகுபாறை, திருவெறும்பூர் வட்டத்தில் மாரிஸ் நகர், ஸ்ரீரங்கம் வட்டத்தில் முத்தரசநல்லூர், மணப்பாறை வட்டத்தில் சீத்தப்பட்டி, முசிறி வட்டத்தில் சொரியாம்பட்டி, துறையூர் வட்டத்தில் சிஎம்எஸ்-4, தொட்டியம் வட்டத்தில் மணமேடு-2, மருங்காபுரி வட்டத்தில் செவந்தான்பட்டி, லால்குடி வட்டத்தில் விரகாலூர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் பிச்சாண்டார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அந்தந்த வட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் முகாம் நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு ரேஷன் சம்பந்தமாக தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்