தமிழகத்தில் கடந்த மாதம் 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.1-1-2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த நான்காம் தேதி, ஐந்தாம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் வசதிக்காக இன்றும் ( 25.11.2023 ) நாளையும் ( 26.11.2023 ) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் voters.eci.gov.in என்ற இணையதளத்திலும், Voters Helpline என்ற செல்போன் செயலி மூலமும் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.